அணியின் வெற்றிக்காக பேடை கழட்டி வீசிய தமிழக வீரர் அஸ்வின்... வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டக் அலி தொடரின் இறுதி ஆட்டத்தில், தமிழ அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இறுதி கட்டத்தில் அஸ்வின் தனது பேடை கழட்டி எறிந்துவிட்டு ஓட்டம் ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டக் அலி தொடரின் இறுதி ஆட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி, நடப்பு சாம்பியன் கர்நாடக அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் முதலில் ஆடிய கர்நாடகா அணி 180 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் ஆடிய தமிழக அணிக்கு கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது அஸ்வின் மற்றும் பாபா அபாரஜித்சித் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

அஸ்வின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிகளை விளாசினார். பின்னர் வித்தியாசமாக யோசனை செய்து காலில் பேட் அணிந்து இருந்தால் வேகமாக ஓட முடியாது என்று கருதி அதனை அகற்றி விட்டு ஓட்டம் ஓடினார். இருப்பினும் இறுதியில் தமிழக அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்