அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பீல்டிங் செய்த விதத்தை பார்த்து, கிரிக்கெட் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 598 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் முச்சதம் அடித்து மிரட்டினார். ரன்கள் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த பாகிஸ்தான் அணி, பீல்டிங்கிலும் செமையாக சொதப்பியது.
குறிப்பாக இளம்வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி பவுண்டரி நோக்கி வந்த பந்து எந்த பக்கம் சென்றது என தெரியாமல் திணறி, பந்தை காலால் தட்டி பவுண்டரிக்கு விட்டார்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில் பலரும் பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷாவை கிண்டலடித்து வருகிறார்கள்.
😳🙈#AUSvPAK pic.twitter.com/FKkW2VDDFY
— cricket.com.au (@cricketcomau) November 29, 2019