அமெரிக்காவால் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலை: தொடரிலிருந்து விலக வேண்டிய நெருக்கடி

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு வீரர்களின் விசாக்களை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க தூதரகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஏழு வீரர்களின் விசாக்கள் அமெரிக்க தூதரகம் நிராகரித்ததால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணம் நெருக்கடியில் உள்ளது.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி நேற்று அமெரிக்கா வழியாக மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படவிருந்தது, ஆனால் விசா பிரச்சினை காரணமாக புறப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசா நிராகரிக்கப்பட்டது தொடர்பில் பதிலுக்காக காத்திருக்கும் ஏழு வீரர்கள் குறித்து நாங்கள் அமெரிக்க தூதரகத்திற்கு முறையீடு செய்துள்ளோம் என்று இலங்கை கிரிக்கெட் செயலாளர் மோகன் டி சில்வா தெரிவித்தார்.

நாங்கள் திங்கள் வரை காத்திருப்போம், எந்தவொரு நேர்மறையான பதிலும் இல்லாவிட்டால், நாங்கள் சுற்றுப்பயணத்திலிருந்து விலக வேண்டும்.

19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைக்கு அவர்களை தயார்படுத்த வலுவான எதிரணியுடன் விளையாட மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்

தொடர்ச்சியான போட்டிகளில் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு எதிராக 19 வயதுக்குட்பட்ட அணி களமிறங்கப்படும் என்றும் டி சில்வா கூறினார்.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட்டின் போட்டிகளை மறுபரிசீலனை செய்யக் கோரியதற்கு மேற்கிந்தியத் தீவுகள் பதிலளித்துள்ளன.

இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் முத்தரப்பு தொடரின் முதல் போட்டியை டிசம்பர் 6ம் திகதிக்கு பதிலாக டிசம்பர் 11ம் திகதி விளையாடுவார்கள் என இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்