தென் ஆப்பிரிக்கா மண்ணில் இலங்கை வீரர் செய்த செயல்... குவியும் பாராட்டுக்கள்! வைரலாகும் காட்சி

Report Print Basu in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மசான்சி சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் பார்ல் ராக்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் இசுரு உதான செய்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

நேற்று நடந்த போட்டியில் பார்ல் ராக்ஸ் அணியும்- நெல்சன் மண்டேலா பே ஜெயின்ட்ஸ் அணியும் மோதின. போட்டியை வெல்ல பே ஜெயின்ட்ஸ் அணிக்கு கடைசி 8 பந்தில் 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19வது ஓவரை இலங்கை வீரர் இசுரு உதான வீசினார், அப்போது, உதான பந்தை துடுப்பாட்டகாரர் விளாச பந்து எதிர்பாராத விதமாக எதிரே இருந்த சக துடுப்பாட்டகாரர் மார்கோ மராய்ஸ் மீது பலமாக தாக்கியது.

இதில், மராய்ஸ் வலியால் ஆடுகளத்தின் நடுவிலே சரிய, பந்தை எடுத்த உதான, அவரை ரன் அவுட் செய்யாமல் விட்டு விட்டார்.

உதானவின் விளையாட்டுத் திறனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். உதான கிரிக்கெட்டின் மாண்பை காட்டியதாகக் போட்டி வர்ணணையாளர் பாராட்டினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்