4 வயது இந்திய சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மேற்கிந்திய தீவு வீரர்... குவியும் பாராட்டு

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்ற நிலையில், அந்தணியின் சீனியர் வீரரான தினேஷ் ராம்தினின் செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி அபார வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமநிலை படுத்தியது. இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 11-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டிக்காக மேற்கிந்திய தீவு வீரர்கள் மைதானத்திற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி தயாராகிக் கொண்டிருந்த போது, அந்தணியின் விக்கெட் கீப்பரும், சீனியர் வீரருமான தினேஷ் ராம்தின், திடீரென்று அங்கு நின்று கொண்டிருந்த நான்கு வயது சிறுமிக்கு இரண்டாவது டி20 போட்டிக்கான இரண்டு டிக்கெட் மற்றும் சிறிய பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.

இதை மேற்கிந்திய தீவு அணி, தன்னுடைய அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டு இணையத்தில் இன்று ஒரு அழகான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அவர் என்ன காரணத்திற்காக கொடுத்தார்? எதற்காக திடீரென்று இப்படி செய்தார்? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்