தந்தைக்கே தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்த இந்திய வீரர் ஹார்திக் பாண்ட்யா... தெரிய வந்த ரகசியம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா தன்னுடைய நிச்சயதார்த்தத்தைப் பற்றி தந்தையிடமே கூறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா பெரிதாக எந்த ஒரு தொடரிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், இது குறித்து அவருடைய ஹார்திக் பாண்ட்யாவின் தந்தை கூறுகையில், நடாஷா ரொம்ப நல்ல பெண். நாங்கள் மும்பையில் சில முறை நடாஷாவை சந்தித்து பேசியிருக்கிறோம்.

அவர்கள் இருவரும் துபாய்க்கு செல்வது எங்களுக்கு தெரியும். ஆனால் நிச்சயதார்த்தத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. எங்களுக்கே இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் எங்களுக்கே தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்