இலங்கையுடன் துல்லியமான ரன் அவுட்! ஒட்டு மொத்த இந்திய அணியை ஆச்சரியப்பட வைத்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் ரன் அவுட்டை பார்த்து கோஹ்லி நம்பமுடியாமல் வாயடைத்து சிரித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியில் சஹாலின் ரன் அவுட் ஒட்டு மொத்த இந்திய அணியையே வியப்பில் ஆழ்த்தியது.

ஆட்டத்தின் 13.4-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் வீசினார். அதை எதிர் கொண்ட இலங்கை வீரர் வகிண்டு ஹசரங்கா, ஸ்டிரைட் திசையில் அடித்து ஆடிவிட்டு ஓடினார்.

அப்போது அங்கு பீல்டிங் நிறுத்தப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர், சஹால் பந்தை பிடித்து துல்லியமான ஸ்டம்பை நோக்கி வீச, பந்தானது மிடில் ஸ்டம்பில் பட்டதால், வகிண்டு ஹசரங்கா ரன் அவுட்டானார்.

இந்திய அணியில் இருக்கும் சில வீரர்கள் இது போன்று மின்னல் வேகத்தில் ரன் செய்வதை பார்த்திருக்கிறோம், ஆனால் சஹால் இது போன்று ரன் அவுட் செய்வது முதல் முறை என்பதால் மைதானத்தில் இருந்த ஒட்டு மொத்த இந்திய அணியினரும் ஆச்சரியப்பட்டனர்.

அதுமட்டுமின்றி சாஹலே நான் தான் இந்த ரன் அவுட்டை செய்தேனா என்பது போல் சிரித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...