பவுண்டரில் உள்ளே-வெளியே தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்..! அசத்தல் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் அணி வீரர் டாம் கூப்பர் பவுண்டரி கோட்டில் அசத்தலாக பிடித்த கேட்ச்சை அனைவரும் பாராட்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான பிக் பாஷ் தொடரில் அடிலெய்ட்-மெல்போர்ன அணிகள் மோதின.

அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியல் வென்ற அடிலெய்ட் அணி முதல் துடுப்பெடுத்தாடியது.

போட்டியின் 3-வது ஒவரை மெல்போர்ன் வீரர் ஜாக் வைல்டர்மத் வீச, துடுப்பாடிய அடிலெய்ட் ஆரம்ப துடுப்பாட்டகாரர் சால்ட் பந்தை பறக்க விட்டார்.

பந்தானது எல்லை கோட்டை நோக்கி வந்த போது, அங்கே பீல்டிங் நின்று கொண்டிருந்த டாம் கூப்பர் அற்புதமாக கேட்ச் பிடித்தார்.

பந்தை பிடித்த அவர் முதலில், பவுண்டரிக்கு வெளியே சென்று விடுவோம் என்ற பயத்தில் பந்தை மேலே நோக்கி வீசினார்.

பின், பவுண்டரிக்கு வெளியே சென்ற அவர், மீண்டும் கோட்டிற்கு உள்ளே வந்த அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

வீடியோ மூலம் ஆய்வு செய்த நடுவர் அவுட் என அறிவித்தார். இதனையடுத்து, சால்ட் 18 ஓட்டங்களில் பெளலியன் திரும்பினார்.

அடிலெய்ட் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்தது. 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்