2019ம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரர் விராட் கோஹ்லி!

Report Print Abisha in கிரிக்கெட்

2019ஆம் ஆண்டில் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் (spirit of cricket)ஆக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கு என்னென்ன விருதுகள் என ஐசிசி பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2019-ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருது விராட்கோஹ்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகப்படுத்துங்கள் என சைகை செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்திய புகாரில் ஓராண்டு தடை பெற்று களம் திரும்பிய ஸ்டிவ் ஸ்மீத்தை ரசிகர்கள் அவமதித்தபோது கோஹ்லி அந்த சைகையை செய்திருந்தார்.

மேலும், உலகின் தலை சிறந்த வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகின் சிறந்த ஒருநாள் போட்டி வீரராக ரோகித் சர்மாவும், அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணி வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனான இந்தியாவின் விராட்கோஹ்லி தேர்வாகியுள்ளார்.

2019ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டி அணியில் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷமி, குல்தீப் ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் டெஸ்ட் போட்டி அணியில் கோஹ்லி மயங் அகர்வால் ஆகிய இந்திய வீரர்கள் இடம் பெற்றுளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்