மைதானத்தையே தன் பக்கம் ஈர்த்த கோஹ்லியின் தீவிர ரசிகர் செய்த செயல்..! வைரலாகும் புகைப்படம்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய வீரர் விராட் கோஹ்லி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

செவ்வாயன்று அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் போது, விராட் கோஹ்லியின் ரசிகர் சிராக் கிலாரே தனது தனித்துவமான சிகை அலங்காரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அவரது தலையின் பின்புறத்தில் இந்தியா அணித்தலைவர் கோஹ்லியின் முகம் போன்று சிகை அலங்காரம் செய்திருந்தார். சிராக் கிலாரே தனது தனித்துவமான சிகை அலங்கார படத்தை ட்விட்டரிலும் பதிவிட்டார்.

பல ஆண்டுகளாக, நான் இந்தியாவின் ஒவ்வொரு போட்டிகளிலும் விராட்டைப் பின்தொடர்கிறேன், அவர் 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராக ஆனதிலிருந்து அவருக்கு ரசிகராக இருந்து வருகிறேன் என்று சிராக் கிலாரே கூறினார்.

மேலும், இந்த சிகை அலங்காரம் செய்ய ஆறு முதல் எட்டு மணிநேரம் ஆனது, எதிர்வரும் ஒவ்வொரு போட்டியையும் இதே பாணியில் பார்க்கத் தயாராகி வருவதாகவும் கிலாரே கூறினார்.

கோஹ்லியை சந்திக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை சந்திப்பதே எனது கனவு, அவரை சந்திக்கும் போது முதலில் நான் அவரது கால்களைத் தொட்டு அவரைக் கட்டிப்பிடித்து அந்த தருணத்தை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வேன் என்று கிலாரே கூறினார்.

நேற்று மும்பையில் நடந்து முதல் ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற மோசமான சாதனை கோஹ்லி படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்