நாம் ஆடாவிட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்- விராட்: இந்தியாவை சொந்த மண்ணி வெல்வது கடினம்- பின்ச்

Report Print Abisha in கிரிக்கெட்

நேற்று நடைபெற்ற இந்திய அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டி குறித்து அணி தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

விராட் கோஹ்லி

அனைத்து அம்சங்களிலும் அவுஸ்திரேலிய அணி எங்களை நிலை குலைய செய்துவிட்டது. நாம் ஆடாவிட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். போதிய ஓட்டங்கள் எடுக்கவில்லை. அவுஸ்திரேலியா போன்ற பலம்வாய்ந்த அணியுடன் மெத்தன போக்கில் விளையாட கூடாது.

எனினும் அடுத்த ஆட்டத்தில், இந்தியா எழுச்சி பெறும். எந்த வகையான ஆட்டத்திலும் சிறப்பாக ஆடினால், அது நம்பிக்கையை தரும். எங்கள் வழக்கமான ஆட்டத்தை ஆட விடாமல் அவுஸ்திரேலிய வீரர்கள் தடுத்துவிட்டனர்.

கே.எல் ராகுல் சிறப்பாக ஆடினார். நான்காம் நிலையில் நான் களம் இறங்கினேன், ஒரு ஆட்டத்தில் தோல்விக்காக மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

ஆரோன் பின்ச்

மிடில் ஓவர்களில் நாங்கள் ஆட்டத்தை கட்டுப்படுத்தினோம். ஷிகர்தவான், கே.எஸ் ராகுல் சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர். எனினும் எங்கள் அற்புத பந்து வீச்சு இந்திய அணியின் ஓட்டங்களை கட்டுக்குள் வைத்திருந்தது.

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வெல்வது கடினம். ஒருநாள் ஆட்டங்களில் வார்னர் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

தரமான இந்திய அணி மீண்டும் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்