மோசமான சாதனையை பதிவு செய்தார் ஜோ ரூட்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
144Shares

ஒரே ஓவரில் 28 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்ததன் மூலம் மிக மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் இங்கிலாந்து அணி வீரரான ஜோ ரூட்.

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது.

நேற்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அணித்தலைவரான ஜோ ரூட் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இருந்த போதும், ஒரு ஓவரில் தொடர்ச்சியாக மகாராஜ் மூன்று பவுண்டரிகள் விளாசியதுடன் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

கடைசி பந்தில் பை மூலமாக நான்கு ரன்கள் சென்றது. இதன்மூலம் ஜோ ரூட் ஒரே ஓவரில் 28 ஓட்டங்கள் கொடுத்தார்.

இதன்மூலம் ஒரே ஓவரில் 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதற்கு முன் லாரா ராபின் பீட்டர்சன் பந்தில் 28 ரன்களும், ஜார்ஜ் பெய்லி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் 28 ரன்களும் கொடுத்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்