தவான் விலகியதால் இளம் வீரர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது..! களமிறங்கும் அதிரடி மன்னர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டி-20 அணியில் தவானுக்கான மாற்று வீரரின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 டி-20, 3 ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் டி-20 தொடர் ஜனவரி 24ம் தேதி தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து பிப்ரவரி 5 முதல் மூன்று ஒருநாள் தொடரும், பிப்ரவரி 21 முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களும் நடைபெறும்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் பீல்டிங்கின் போது காயமடைந்த தவான், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் தவனுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ஒரு நாள் அணியில் முதன் முறையாக பிரித்வி ஷா இடம்பிடித்துள்ளார். 2018-19 உள்நாட்டு தொடரின் போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பிரித்வி ஷாவிற்கு 8 மாத கால தடை விதிக்கப்பட்டது.

பிரித்வி ஷாவின் தடை 2019 நவம்பரில் முடிவடைந்த நிலையில், அவர் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடினார்.

டி-20 அணி வீரர்கள் விபரம்: விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா (துணைத்தலைவர்), கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரத் பும்ரா , நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர்.

ஒருநாள் அணி வீரர்கள் விபரம்: விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா (துணைத்தலைவர்), பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர மத்ம ஜத்ஜா ஷமி, நவ்தீப் சைனி, ஷார்டுல் தாக்கூர், கேதார் ஜாதவ்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்