எல்லை கோட்டில் அசத்தல் கேட்ச்.. தட்டி தட்டி பிடித்து மிரள வைத்த ரோஹித்..! குவியும் பாராட்டுக்கள்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா எல்லை கோட்டிற்கு அருகே பிடித்த கேட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது..

ஆக்லாந்தில் நடந்த டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என்ற வெற்றி கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் 7வது ஓவரை இந்திய வீரர் சிவம் துபே வீச, துடுப்பாடி நியூசிலாந்து ஆரம்ப துடுப்பாட்டகாரர் குப்தில் பந்தை பறக்க விட்டார்.

எல்லை கோட்டிற்கு மிக அருகே பந்தை கேட்ச் பிடித்த ரோகித், கோட்டை தொடவிருந்த நிலையில் பந்தை மேலே வீசி, பின்னர் மீண்டும் கேட்ச் பிடித்து அசத்தினார். இது டி-20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சிவம் துபே எடுத்த முதல் விக்கெட்டாக அமைந்தது.

அதிரடியாக விளையாடிய குப்தில் 19 பந்தில் 30 ஓட்டங்களுடன் நடையை கட்டினார். எல்லை கோட்டில் அசத்தல் கேட்ச் பிடித்த ரோஹித்தை அனைவரும் பாராட்டினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்