2 ஓட்டங்களுக்கு அவுட்! வெறுப்பேற்றிய ரசிகரை தகாத வார்த்தைகளால் ஏசிய நட்சத்திர வீரர்: நேரலையில் சிக்கிய சம்பவம்

Report Print Basu in கிரிக்கெட்

ஜோஹன்னஸ்பர்க் டெஸ்டில் ரசிகரை தகாத வார்த்தைகளால் ஏசியதற்காக இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

தென் ஆப்பரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

3 போட்டிகள் முடிந்த நிலையில் 2-1 என்ற வெற்றி கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் ஜனவரி 24ம் திகதி ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டாரர்ஸ் மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணி, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இல்லாத நிலையில், தொடரை சமன் செய்ய இப்போட்டியில் கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

முதல் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்கா வீரர் நார்ட்ஜே வீசிய பந்தில் டஸ்ஸனிடம் கேட்ச் கொடுத்து 2 ஓட்டங்களில் நடையை கட்டினார்.

விரக்தியுடன் உடை மாற்றும் அறைக்கு ஸ்டேக்ஸ் திரும்பிக்கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் ஸ்டோக்ஸை நோக்கி, வெறுப்பேற்றும் வகையில் ஏதோ கூறியுள்ளார்.

அதை கேட்டு கோபமடைந்த ஸ்டோக்ஸ், ரசிகரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இக்காட்சி நேரலையில் ஒளிபரப்பாகியுள்ளது.

ஸடோக்ஸ் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக போட்டி நடுவர் கண்டறிந்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ள ஸ்டோக்ஸ், ட்விட்டர் வயிலாக மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்