5,00,000 ஓட்டங்கள்! கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறை: இங்கிலாந்தின் மிரள வைக்கும் உலக சாதனை

Report Print Basu in கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ஓட்டங்கள் எடுத்த உலகின் முதல் அணியாக இங்கிலாந்து சாதனை படைத்தது.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான வாண்டரர்ஸில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்டின் போது இங்கிலாந்து இச்சாதனையை நிகழ்த்தியது.

வெள்ளிக்கிழமை டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் போது இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் ஓட்டங்கள் அடித்த போது, இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ஓட்டங்களை அணி எட்டியது.

இங்கிலாந்து அணி தனது 1022வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த பட்டியலில் 830 டெஸ்ட் போட்டிகளில் 4,32,706 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், இந்தியா 540 டெஸ்ட் போட்டிகளில் 2,73,518 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் 545 டெஸ்ட் போட்டிகளில் 2,70,441 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் விளையாடிய மூன்றாவது டெஸ்டில், வெளிநாட்டு மண்ணில் 500 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் அணியாக இங்கிலாந்து சாதனை படைத்தது.

அடுத்தபடியாக வெளிநாட்டு மண்ணில் 404 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும், 268 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த அணிகள் பட்டியலில் 2,18,808 ஓட்டங்களுடன் இந்திய முதலிடத்தில் உள்ளது. டி-20 போட்டியில் 22,125 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்