நியூசிலாந்து மண்ணில் வரலாற்று சாதனை படைத்த இந்தியா! பழிக்கு பழி தீர்த்தது

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது.

இதன் முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே தனதாக்கி கொண்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்து ஆடியது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 60 ஓட்டங்களும், லோகேஷ் ராகுல் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 156 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

இதையடுத்து இந்தியா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 5 - 0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.

இதன்மூலம் டி20 தொடரில் முதல் முறையாக இந்திய அணி ஒரு தொடரை முழுவதுமாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நடந்து முடிந்த உலகக்கோப்பை அரையுறுதியில் டோனியை ரன் அவுட்டாக்கியதன் மூலம் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு சென்றது, அதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்தியா தொடரை வென்று அசத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்