சிக்ஸர் சென்ற பந்தை அற்புதமாக பிடித்து வீசிய சஞ்சு சாம்சன்! வெளியான வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் பவுண்டரியில் செய்த பீல்டிங்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மவுண்ட் மௌன்கானுய் மைதானத்தில் நடந்த ஐந்து மற்றும் கடைசி டி-20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, தொடரை 5-0 என வென்ற இந்திய அணி சாதனை படைத்தது.

போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டகாரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ஓட்டங்களில் நடையை கட்டி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

எனினும், பீல்டிங்கில் ஒரு கேட்ச் மற்றும் ரன் அவுட் செய்து பட்டையை கிளப்பினார். அதுமட்டுமின்றி பவுண்டரில் பறந்து சிக்ஸர் ஒன்றை தடுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நியூசிலாந்து இன்னிங்ஸின் போது 7வது ஓவரை இந்திய வீரர் சர்துல் தாக்கூர் வீசினார். 7வது ஓவரின் 6வது பந்தை தாக்கூர் வீச துடுப்பாடி நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் பந்தை பறக்கவிட்டார்.

அனைவரும் அது சிக்ஸர் என்று நினைக்க, பவுண்டரி கோட்டை தாண்டி பறந்து பந்தை பிடித்த சஞ்சு சாம்சன், காற்றிலே பந்தை பவுண்டரி கோட்டிற்குள் வீசி சிக்ஸரை தடுத்த வியக்க வைத்தார்.

சஞ்சு சாம்சனின் அசாரதான பீல்டிங் திறமையை கண்ட நியூசிலாந்து வீரர்கள் மட்டுமின்றி மைதானத்திலிருந்து ரசிகர்களும், தொலைக்காட்சியில் பார்த்து ரசிகர்களும் மிரண்டு போயினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்