இந்திய அணிக்கு பெருத்த அடி..! நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்?

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய அணியின் நடசத்திர வீரர் ரோஹித் சர்மா நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டி-20 போட்டியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி, தொடரை 5-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.

போட்டியின் போது ஓட்டங்கள் எடுக்க ஓடும் போது காயமடைந்த ரோஹித் சர்மா, 41 பந்துகளில் 60 எடுத்திருந்த நிலையில் பாதியிலேயே ஓய்வுபெற்றார்.

இந்நிலையில், காயம்பட்ட ரோஹித் மீதமுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிவிட்டார்.

இப்போதே அது நன்றாக இல்லை. பிசியோ அவரை கண்காணித்து வருகின்றனர். தொடரில் மேலும் பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து-இந்தியா அணிக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் புதன்கிழமை தொடங்குகிறது, அதன் பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நடைபெறவுள்ளது.

ரோஹித் சர்மாவிற்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பிசிசிஐ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் அணியில் அகர்வாலுக்கும், டெஸ்ட் அணியில் ராகுல் அல்லது சுப்மன் கில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...