பவுண்டரி எல்லையில் வில்லிம்சனுடன் பேசியது என்ன? பலரின் கேள்விக்கு பதிலளித்த கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணியின் தலைவரான வில்லியம்சனுடன், என்ன பேசினேன் என்பதை இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது, இந்த தொடரை இந்திய அணி 5-0 என்று கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த 5-வது டி20 போட்டியின் போது, பவுண்டரி எல்லையில், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியும், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனும் சேர்ந்து ஏதோ பேசுவது போன்று புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகின,

இதனால் கோஹ்லி, வில்லியம்சனிடம் அப்படி என்ன பேசியிருப்பார் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து கோஹ்லியிடம் கேட்ட போது, வில்லியம்சன் மற்றும் நான் எங்கள் இருவரது மனநிலையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. உலகின் வெவ்வேறு இடங்களில் பிறந்து இது போன்று ஒரே மாதிரி சிந்திப்பது அதிசயமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் சிந்திப்பது பேசுவது எல்லாம் ஒரே மொழியில் என்பது சிறப்பான விடயம்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது சிறப்பான ஒருவரது கையில் உள்ளது. அந்த அணியை வழிநடத்த வில்லியம்சன் மிகத் தகுதியான நபர் என்று நான் நினைக்கிறேன்.

நியூசிலாந்து முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அவர் விளங்குவார். வருங்காலத்தில் அந்த அணி வெற்றிகளை குவிக்கும் அவரது தலைமையில் சிறப்பாக விளையாடும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்