இன்று மோத உள்ள இந்தியா-பாகிஸ்தான்! உலககோப்பை வெற்றிபெறுமா?

Report Print Abisha in கிரிக்கெட்

19வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இன்று மோத உள்ளது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இரு அணிகளும் தோல்விகளை சந்திக்காமல் அரையிறுதியில் கால் பதித்துள்ளனர்.

கால் இறுதியில் இந்தியா அவுஸ்திரேலியா அணியையும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தின.

பிரியம் கார்க் தரைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தி வருகின்றனது.

தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆட்டங்களில் 3அரை சதங்கள் அடித்து துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார்.

கால் இநுதியில் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்வால் தவிர்த்து மற்ற வீரர்கள் சரியாக செயல்பட தவறினாலும், பின் களம் இறங்கிய வீரர்கள் தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தினர்.

7வது விக்கெட்டுக்கு அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய்ஜோடி 61ஓட்டங்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது. அதேபோல் பந்து வீச்சில் கார்த்தின் தியாகி அற்புதமாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

பாகிஸ்தான் அணியில் கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக இடம் பெற்ற ஹரைரா 64ஓட்டங்கள் விளாசி கவனத்தை ஈர்த்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படலாம். வேகப்பந்து வீச்சில் அப்பாஸ் அப்ரீடி, மொகமது அமிர் கான், தஹிர் ஹுசைன் ஆகியோர் இந்திய துடுப்பாட்டகாரர்களுக்கு சவல் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்