ரோஹித் சர்மா விலகியதால் இளம் வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! இந்திய அணியில் அதிரடி மாற்றம்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து சுற்றுப் பயணத்திலிருந்து காயம் காரணமாக இந்திய நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விலகிய நிலையில் அவருக்கான மாற்று வீரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் காயமடைந்த ரோஹித் சர்மா, மீதமுள்ள ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு மாற்றாக மயங்க் அகர்வால் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிரித்வி ஷா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோஹ்லி, ஒரு நாள் போட்டியில் பிரித்வி ஷா தொடக்க துடுப்பாட்டகாரராக களமிங்குவார் என தெரிவித்துள்ளார்.

மேலும், கே.எல்.ராகுல் நடுத்தர வரிசையில் விளையாடுவார், நடுத்தர வரிசையில் விளையாடுவதற்கு அவர் பழக்கமடைய வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு நாள் அணி வீரர்க்ள விவரம்: விராட் கோஹ்லி (அணித்தலைவர்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர், கேதார் ஜாதவ்.

இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்: விராட் கோஹ்லி (அணித்தலைவர்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மன் கில், புஜாரா, ரஹானே (துணைத்தலைவர்), ஹனுமா விஹாரி, சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா (உடற்பயிற்சி சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்).

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்