ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி (56) மற்றும் ரோஹைல் நசீர் (62) தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 43.1 பந்துகளில் 172 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்திய அணியின் சார்பில், சுஷாந்த் 3, தியாகி மற்றும் பீஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (105) மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா (59) ஆகியோர் ஒரு விக்கெட் கூட பறிகொடுக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

35.2 பந்துகளிலே இந்திய அணி 176 ரன்களை எடுத்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதன்மூலம் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக அதிக ரன்களை விளாசிய இந்திய ஜோடி என்கிற பெருமையினை பெற்றனர்.

அதேபோல உலகக்கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் அதிக ரன்களை சேர்த்த ஜோடி என்கிற சாதனையும் படைத்துள்ளனர்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்