நியூசிலாந்திடம் ஒயிட் வாஷ்... மிகவும் மோசமாக விளையாடிவிட்டோம்: கோஹ்லி வேதனை

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரில், இந்திய அணி ஒயிட் வாஷ் ஆன நிலையில், மூன்றாவது போட்டிக்கான தோல்வி குறித்து கோஹ்லி பேசியுள்ளார்.

இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த டி20 தொடரை 5-0 என்று இந்திய அணி வென்றது.

அதற்கு பழி தீர்க்கும் விதமாக நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரில் ஆவேசமாக களமிறங்கியது.

அதன் படி இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அந்தணி வெற்றி பெற்றதன் மூலம், தொடரை 3-0 என்று ஒயிட் வாஷ் செய்து, இந்திய அணியை பழிக்கு பழி தீர்த்ததுடன், மரண அடி கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த போட்டி முடிவுக்கு பின் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறுகையில், இதை மிகப் பெரிய தோல்வி என்று கூறமாட்டேன்.

பந்து வீச்சிலும், பீல்டிங்கில் கவனம் செலுத்த தவறிவிட்டோம், இந்த தொடரில் நாங்கள் வெல்வதற்கான தகுதி எங்களிடம் இல்லை.

மிகவும் மோசமாக விளையாடினோம், வரும் வாய்ப்புகளைத் தவற விட்டோம் . நியூசிலாந்து அணி எங்களை விட மிகவும் நுணுக்கமாக ஆடினார்கள் .

மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற அவர்களுக்கு தகுதி இருக்கிறது. தற்போது டெஸ்ட் தொடருக்காக காத்திருக்கிறோம். அணி நன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது சரியான மனநிலையில் சென்றால் டெஸ்ட் தொடரில் வெல்லலாம் என்று கூறினார்.

இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்