2020 ஐபிஎல்லில் புதிய மாற்றத்துடன் வரும் பெங்களூரு அணி! வெற்றிக்காக இந்த மாற்றமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி புதிய மாற்றத்துடன் களமிறங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில், பலம் வாய்ந்த அணியாக பெங்களூரு அணி இருக்கும். ஏனெனில் இந்தணியில் கோஹ்லி, டிவில்லியர்ஸ் போன்ற மிரட்டலான வீரர்கள் இருக்கின்றனர்.

இருப்பினும் கடந்த 12 சீசனில் பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. ஐபிஎல் தொடரில் ராசியில்லாத அணி என்றே பலரால் கூறப்படும்.

இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற முடிவில் பெங்களூரு அணி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய் கிழமை, பெங்களூரு அணியின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்தணியின் லோகோக்களை அகற்றியுள்ளனர்.

அவர்கள் தங்கள் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றியுள்ளதாகவும், விரைவில் புதிய லோகோவுடன் தங்கள் புதிய பெயரை அறிவிப்பார்கள் என்றும், இது வரும் 16-ஆம் திகதி நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எத்தனை மாற்றம் கொண்டு வந்தால் சரி, இந்த முறையாவது பெங்களூருவுக்கு கோப்பையை வாங்கிக் கொடுங்கள் என்பது தான் பெங்களூரு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்