விக்கெட் எடுத்தால் பிடிக்காதா? இந்திய அணியில் தமிழக வீரர் எடுக்காததற்கு ஐபிஎல் உரிமையாளர் கடும் தாக்கு

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய தேர்வு குழுவினர் தொடர்ந்து அஸ்வினை புறக்கணித்து வருவதால், ஐபிஎல் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று வித போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியும் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் அஸ்வினை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணித்தேர்வுக்குழுவினர் புறக்கணித்து வருவது பற்றி ஆதங்கமாக டுவிட் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அஸ்வின் ஏன் இந்த இந்திய அணியில் இல்லை? விக்கெட்டுகளை எடுப்பவர்களைக் கண்டால் பிடிக்கவில்லை என்று தெரிகிறது.

டி20 ஒயிட்வாஷ் தோல்விக்குப் பிறகு நியூஸிலாந்து அணியினர் ஒருநாள் தொடரில் தங்கள் ஒயிட்வாஷ் மூலம் உலகக்கோப்பை 2019 அரையிறுதி வெற்றி ஒன்றும் அதிர்ஷ்டம் அல்ல என்பதைக் காட்டி விட்டனர்.

இந்திய அணிக்குத் தேவை விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களும் புதிராக வீசி திடீர் திருப்பங்களை ஏற்படுத்துபவர்களும்தான் என்று குறிபிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்னொரு டுவிட்டில், வெளியில் உட்கார வைப்பதற்காக ரிஷ்ப பந்த்தை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? நிச்சயமாக அவர் ஏ தொடரிலோ, உள்நாட்டு தொடரிலோ ஆடி பயன்பெற்றிருப்பார். பந்த்தைப் போல் திறமை வாய்ந்த ஒரு வீரரை 5-வது டி20 போட்டியிலும் தற்போது 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆடாமல் செய்திருப்பது பொருளற்றதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்