ஜிம்மில் டான்ஸ்..! இணையத்தை கலக்கும் தவான், பாண்டியா மற்றும் இஷாந்த சர்மா வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்டகாரர் ஷிகர் தவான், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் ஜிம்மில் டான்ஸ் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஷிகர் தவான், பாண்டியா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தவறவிட்டனர்.

இந்த மூவரும் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு மூலம் தங்கள் காயங்களிலிருந்து மீண்டு வருகின்றனர்.

அங்கு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் போது மூவரும் பாலிவுட் பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடிய காட்சியை தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோவில், பாண்டியா நடந்த படி நடனமாடிக்கொண்டே வர, இதை கண்ட தவான் சைக்கிளிங் செய்த படி டான்ஸ் ஆட, இறுதியில் இஷாந்த சர்மாவும் சேர்ந்து ஆடுகிறார். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்