பாகிஸ்தானுக்காக இங்கு வந்துள்ளோம்... நிரூபிப்போம்: இலங்கை ஜாம்பாவன் சங்காகாரா உறுதி

Report Print Santhan in கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாடுவதற்கு பாகிஸ்தான் சிறந்த நாடு என்பதை நிரூபிப்பதற்காகவே இங்கு வந்துள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய எம்.சி.சி அணியின் தலைவருமான சங்ககாரா கூறியுள்ளார்.

பாகிஸ்தானிற்கு உலகில் இருக்கும் முக்கிய அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

சமீபத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின்னரும் எந்த ஒரு அணியும் பாகிஸ்தானிற்கு சென்று விளையாட முன் வரவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ஊக்குவிக்கும் விதமாக, உலக கிரிக்கெட் குழு Marylebone Cricket Club’s (MCC) சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் தலைவராக சங்ககார உள்ளார்.

இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், சங்ககாரா பாகிஸ்தானின் லாகூருக்கு வந்திறங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாப்பு என்பது உலகில் எங்கும் பெரிய சிக்கல்தான், ஆனால் பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கிரிக்கெட் நாடுகளிடையே பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நம்பிக்கை மெதுவாக ஆனால் உறுதியாக ஏற்பட்டு வருகிறது. சர்வதேச அணிகள் இங்கு அதிக முறை பயணம் மேற்கொண்டு ஆடும் போது இந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதிபடுவதோடு பாகிஸ்தானை புறக்கணிப்பதும் கடினமானதாக மாறும்.

களத்தில் ஆடுவதன் மூலம் நாம் உலகிற்குச் செய்தியை அறிவிக்க முடியும். பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட உலகின் தலைசிறந்த இடங்களும் ஒன்று என்பதை பிற நாடுகளும் உணரும் விதமாக ஊக்குவிப்பதில் எங்கள் பங்கும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான அருமையான இடமாக இருந்தது, இனியும் இருக்கப்போகிறது என்று தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற எம்.சி.சி மற்றும் Lahore Qalandars அணிகள் மோதிய போட்டியில், எம்.சி.சி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் மார்ச் 2009-ல் பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை அணியினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சங்கக்காரா காயமடைந்ததோடு ஒரு தோட்டா இவரது தலைக்கு அருகில் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்