டோனியின் சென்னை அணியின் துணை கேப்டன் இனி இவர் தான்! ரெய்னா கூறிய உறுதியான தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான சுரேஷ் ரெயான் தனக்கு துணை கேப்டன் பதவி வேண்டாம் எனவும் இந்த முறை வேறொரு நபர் துணை கேப்டனாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டோனி இல்லாத ஆட்டங்களில், துணை கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னா அணியின் தலைவராக இருந்தார்.

இதனால் இந்த முறையும் அவர் தான் துணை கேப்டன் என்று கூறப்பட்டது.

ஆனால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடர் குறித்து கூறுகையில், கடந்த முறை டோனி விளையாட முடியாத போட்டிகளில் நான் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டேன்.

ஆனால் அந்த போட்டிகளில் கேப்டனாக என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இம்முறை நான் துணை கேப்டனாக செயல்பட போவதில்லை எனக்கு பதிலாக முன்னணி அதிரடி வீரரான ஷேன் வாட்சன் சென்னை அணி துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...