இந்திய அணியை கதற விடும் நியூசிலாந்து... மிகவும் மோசமாக அவுட்டான இளம் வீரர் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 122 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சை தீர்மானித்தது. ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதால், இந்திய அணி அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 122 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி ஆடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டால், முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியினர் பவுன்சர் பந்து வீச்சு மூலம், இந்திய வீரர்களை மிரட்டினர். இந்திய துடுப்பாட்ட வீரர்களான கோஹ்லி, புஜாரா போன்றோர் தடுத்து ஆட முடியாமல் விரைவில் பவுலியன் திரும்பினர்.

அந்த வகையில், இந்திய அணியின் துவக்க வீரரான பிரித்திவ் ஷா, வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தியின் பந்தை தாக்கு பிடிக்க முடியாமல் துல்லியமாக போல்டாகி வெளியேறினார். அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏனெனில் பிரித்திவ் ஷா இது போன்ற பந்துகளில் ஏராளமான முறையில் அவுட்டாகி வருகிறார். இது ஒரு மோசமான அவுட், இதை திருத்தி கொள்ள வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...