கெட்ட வார்த்தை பேசி வீரர்களை வெறுப்பேற்றிய கோஹ்லி! நியூசிலாந்து டெஸ்டில் சிக்கிய காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தொடர்ந்து கெட்ட வார்த்தை பேசியதால், ரசிகர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று வில்லிங்டனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டி மூலம் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லருக்கு சமூகவலைத்தளங்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, டெய்லரை பாராட்டி பேசினார்.

இதே கோஹ்லி, டெய்லர் இன்று இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சில் அவுட்டானவுடன், தேவையில்லாத சைகை செய்தும், கெட்ட வார்த்தை பேசியும் அவரை வெறுப்பேற்றினார்.

இதோடு விடாமல், 12-வது ஓவரின் முதல் பந்தை ஷமி வீசும்போதும் பென் ஸ்டோக்ஸ் பெயர் போலவே வரும் கெட்ட வார்த்தையை கோஹ்லி சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்