10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த இந்தியா! அதற்கு கோஹ்லியே காரணம் என இந்திய வீரர் குற்றச்சாட்டு

Report Print Raju Raju in கிரிக்கெட்
327Shares

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோஹ்லி சரியாக விளையாடாமல் சொதப்பியதே காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் காட்டமாக கூறியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டன்னில் நடந்தது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இது குறித்து பேசிய இந்திய அணி முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விராட் கோஹ்லி இரு இன்னிங்ஸ்சிலும் விரைவில் அவுட் ஆனதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கோஹ்லி ரன்களை குவித்து இருந்தால், அது எதிரணியால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறியிருக்கும்.

ஆனால் யாரும் எதிர் தாக்குதல் நடத்தி போராடவில்லை. இந்த காரணங்களால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது என கூறினார்.

முதல் டெடில் கோஹ்லி முதல்-இன்னிங்சில் 2 ரன்னிலும் இரண்டாவது இன்னிங்சில் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்