ஒரே ஆளாக எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீராங்கனை!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்
432Shares

சண்டிகரில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் போட்டியின் போது, எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி காஷ்வீ கவுதம் என்கிற வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.

ஆந்திராவின் கடபாவில் உள்ள கே.எஸ்.ஆர்.எம் கல்லூரி மைதானத்தில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் சண்டிகர் பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. போட்டியில் முதலில் விளையாடிய சண்டிகர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டனான காஷ்வீ கவுதம் 68 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி, காஷ்வீ கவுதமின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணற ஆரம்பித்தது.

4.5 ஓவர்கள் வீசிய காஷ்வீ கவுதம் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

முன்னதாக 1999 ல் புதுதில்லியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் அணில் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்