ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா! டோனி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி வருகிற 2-ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் 29ம் திகதி தொடங்குகிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கு தயாராவதற்கு ஏதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி வருகிற 2ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க இருக்கிறார்.

அந்த சமயத்தில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் யாரெல்லாம் மற்ற போட்டிகள் இன்றி ஆயத்தமாக இருக்கிறார்களோ அவர்களும் பயிற்சியில் இணைந்து ஈடுபடுவார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய பிறகு டோனி எந்தவித சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

38 வயதான டோனி மீண்டும் பல மாதங்களுக்கு பிறகு பயிற்சியை தொடங்கி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்