ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு..! கோஹ்லியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஸ்மித்

Report Print Basu in கிரிக்கெட்

ஐசிசி-யின் டெஸ்ட் துடுப்பாட்டகாரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணித்தலைவர் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி அவுஸ்திரேலிய ரன்-மெஷின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததார், இரண்டாவது இன்னிங்சில் 43 பந்துகளில் 19 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

விராட் கோஹ்லி இப்போது 906 புள்ளிகளுடன் டெஸ்ட் துடுப்பாட்டகாரர்களுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் யில் 2 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

இதற்கிடையில், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லாபூசாக்னை விஞ்சி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3 வது இடத்தைப் பிடித்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் புள்ளிகளை இழந்ததால், பந்து வீச்சாளர்களு்க்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம்பிடிக்கவில்லை.

765 புள்ளிகளுடன் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 9வது இடத்தைப் பிடித்தார். முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்தியராக உள்ளார்.

இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 6வது இடத்தை பிடித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்