இலங்கை பந்துவீச்சில் சுருண்ட மே.இந்திய தீவுகள்: 161 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஹம்பன்டோட்டாவில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்களை குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 127 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான குசல் மெண்டிஸ் 119 ரன்களும் எடுத்திருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் ஷெல்டன் கோட்ரெல் 4 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 346 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் துவக்க வீரர் ஷாய் ஹோப் (51) தவிர, அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கி வந்த வேகத்திற்கு பெவிலியன் நோக்கி நடையை கட்டினர்.

இதனால் அந்த அணி 184 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக, லக்ஷன் சந்தகன் மற்றும் வனிண்டோ ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதன்மூலம் இலங்கை அணியானது 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்