மேற்கிந்திய தீவுகளுடான போட்டியின் போது இலங்கை ரசிகர்கள் மீது தாக்குதல்...! கொந்தளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

Report Print Basu in கிரிக்கெட்

சூரியவேவா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க இலங்கை கிரிக்கெட்டுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது சூரியவேவா சர்வதேச மைதானத்தின் நுழைவாயிலில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதன்போது, ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அவரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விளையாட்டு அமைச்சகம் மற்றும் எஸ்.எல்.சி நிர்வாகத்தின் செயலாளருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும உத்தரவிட்டுள்ளார்.

நிலைமை தொடர்பாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. மேலும். நேற்றைய சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்