ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கு இது தான் முக்கிய காரணம்: உண்மையை உடைத்த நட்சத்திர வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து நான் விலகுவதற்கு முக்கிய காரணம் உலகக்கோப்பை தொடர் தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. இதற்காக சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கிவிட்டனர்.

ஆனால் இந்திய அணி, தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளதால், இன்னும் சில இந்திய வீரர்கள் தங்கள் ஐபிஎல் அணிகளுடன் இணையவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான கிறிஸ் வோக்ஸ், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணியால் 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.

ஆனால் அவர் திடீரென்று தான் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

Getty Images

இதையடுத்து இங்கிலாந்து அணி, தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிக கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

அதற்காக இங்கிலாந்து வந்த கிறிஸ் வோக்ஸிடம் இது குறித்து கேட்ட போது, நான் ஐபிஎல் தொடரை மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு என்னால் முடிந்தவரை நான் ஆட வேண்டும் என நினைக்கிறேன்.

இந்த ஆண்டு உலகக்கோப்பை அணியில் ஆட வேண்டும். இம்முறை ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்றால் காயம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இதனால் இங்கிலாந்து வாய்ப்பை நான் இழக்க கூடும். எனது உயரிய விருப்பம் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு ஆடுவது மட்டுமே. இம்முறை இல்லையென்றாலும் அடுத்த முறை நிச்சயம் ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன். ரசிகர்கள் என்னை புரிந்துகொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்