உலகக்கோப்பையில் இந்தியாவின் மோசமான தோல்வி... வரவேற்க ஒருவர் கூட இல்லை? வெளியான புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

மகளிருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்த நிலையில், இந்திய அணி வீராங்கனைகளை வரவேற்க விமான நிலையத்தில் ஒருவர் கூட இல்லாமல் இருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் மகளிருக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் ஆட்டத்தில், இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இறுதி போட்டியில், பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவுடன் மோதிய, இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக இந்திய விராங்கனைகள் சிலர் மைதானத்தில் கண்ணீர் விட்டனர்.

இந்நிலையில் நாடு திரும்பிய(மும்பை சர்வதேச விமானநிலையம்) இந்திய விராங்கனைகளை வரவேற்க ஒருவர் கூட இல்லை என்று கூறப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

இதுவே அவர்கள் படைத்த சாதனை தான், இதற்காகவாது, அவர்களை உற்சாகமாக வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் யாரும் இல்லாமல், வீராங்கனைகள் சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்