ஐபிஎல் நடக்குமா? தெளிவுபடுத்திய இந்திய விளையாட்டு அமைச்சகம்

Report Print Basu in கிரிக்கெட்

கொரோனா வைரஸ் பரவுவதால் நிலைமையை மனதில் கொண்டு, ஏப்ரல் 15க்குப் பிறகு அரசாங்கம் புதிய ஆலோசனைக்கு பின்னரே ஐபிஎல் நடத்தலாமா என்பது தீர்மானிக்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

கிரிக்கெட் விடயங்களில் முடிவெடுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) என்றாலும், தொற்றுநோய் என்பது நாட்டின் குடிமக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று என விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு கூறினார்.

ஏப்ரல் 15 க்குப் பிறகு அரசாங்கம் நிலைமைக்கு ஏற்ப புதிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் கொண்டு வரும்.

பிசிசிஐ என்பது கிரிக்கெட்டுக்கான ஒரு அமைப்பு, ஆனால் இது குடிமக்களின் பாதுகாப்பு குறித்தது. ஒரு போட்டியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இருப்பார்கள்.

எனவே இது விளையாட்டு அமைப்புகள் அல்லது விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு பற்றியது மட்டுமல்ல, இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்ககான பாதுகாப்பை பற்றியது என்று அவர் கூறினார்.

முன்னதாக மார்ச் 29 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவிருந்த நிலையில், கொரோனா காரணமாக பிசிசிஐ ஏப்ரல் 15ம் திகதி வரை வரை தொடரை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்