2007-ல் உலகக்கோப்பை ஹீரோ.. 2020-ல் உலக ஹீரோ! கொரோனாவுக்கு எதிராக காக்கிச்சட்டையில் கலக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

கொரோனாவால் உலகம் முழுவதும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஜோகிந்தர் சர்மா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சேவை செய்து வருவதை சர்வததேச கிரிக்கெட் ஆணையம் பாராட்டியுள்ளது.

2007 ஆம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்ற போட்டியில் இறுதி ஓவரை வீசியவர் ஜோகிந்தர் சர்மா. அவர் தற்போதும் தொடர்ந்து நாட்டுக்கு சேவை செய்து வருகிறார்.

தற்போது ஹரியானாவில் துணை பொலிஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ஜோகிந்தர் சர்மா, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுகிறார்.

முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரின் கடின உழைப்பைப் சர்வதேச கிரிக்கெட் ஆணையமான ஐ.சி.சி பாராட்டியுள்ளது.

2007ல் டி20 உலகக்கோப்பை ஹீரோ 2020ல் உண்மையான உலக ஹீரோ. கிரிக்கெட்டுக்கு வாழ்க்கைக்கு பின்னர் ஒரு பொலிஸ்காரராக இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் சேவை செய்பவர்களில் ஒருவர் என்று ஐசிசி ட்வீட் செய்தது.

77 முதல் தர ஆட்டங்களில் பங்கேற்ற ஜோகிந்தர் சர்மா, டி-20 உலகக் கோப்பையில் மிஸ்பா-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தியதால், இந்தியாவின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவரது கிரிக்கெட் வாழ்க்கை திட்டமிட்டபடி செல்லவில்லை, அவர் டிசம்பர் 2018ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்