ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா - முன்னாள் வீரர் கருத்து

Report Print Abisha in கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

“ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் யார் என்றால் அது ரோகித் சர்மா தான். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

கோப்பையை வெல்வதில் தான் கேப்டன்ஷிப் திறமை இருக்கிறது. இறுதியில் அவரே ஐ.பி.எல். போட்டியின் மிகவும் வெற்றிகரமான தலைவராக இருப்பார்.

ஏற்கனவே 4 கோப்பைகளை வென்று இருக்கிறார். ஐ.பி.எல். வாழ்க்கையை நிறைவு செய்யும் போது தனது கேப்டன்ஷிப்பில் ரோகித் சர்மா 6 அல்லது 7 பட்டங்கள் வென்று இருக்கக்கூடும்” என்று தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்