டோனியிடம் சவால்விட்டு தோற்றுப் போனேன்! 2 ஆண்டு ரகசியத்தை உடைத்த பிராவோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் போது டோனி என்னை கிண்டல் செய்து கொண்டே இருந்ததால், அவரிடம் சவால் விட்டு தோற்றுப் போய்விட்டதால், மேற்கிந்திய தீவு வீரர் டேவைன் பிராவோ கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது, டோனி மற்றும் பிராவோ இருவரும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டனர்.

அதாவது கையில் பேட்டுடன் 3 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். இதில் இன்ச் இடைவெளியில் வெற்றி பெற்றார்.

இது குறித்து ரசிகர் ஒருவர் பிராவோவிடம் இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்த போது கேட்டார். அதற்கு பிராவோ,

அந்த தொடர் முழுதும் நான் மிகவும் மெதுவாக இருக்கிறேன் என்றும், எனக்கு வயதாகிவிட்டது என்றும் நான் ஒரு கிழவன் என்றும் டோனி கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.

அதனால் நான் டோனியிடம் அப்படி ஒரு சவால் விட்டேன். அந்த தொடர் முடிந்தவுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டு அவரை தோற்கடிப்பேன் என்பது தான் அந்த சவால்.

அதன்படி தொடர் முடிந்த பின் அந்த பந்தயத்தில் ஈடுபட்டோம். ஏன் முன்பே இந்த பந்தயத்தை நடத்தவில்லை என்றால் தொடரின் போது இருவரில் யாருக்கும் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான். இருவருக்கு இடையேயான போட்டி மிக மிக நெருக்கமானதாக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்