எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், அவரை எளிதில் அணுகலாம்! டோனி குறித்து ரிஷாப் பண்ட்

Report Print Abisha in கிரிக்கெட்

இந்திய அணியின் வீரர் ரிஷாப் பண்ட், டோனி குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில்‘‘கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்எஸ் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார்.

எந்தவொரு பிரச்சனை ஏற்பட்டாலும், நான் எளிதில் அணுகலாம். பிரச்சனைக்கான முழுமையாக தீர்வை அவர் ஒருபோதும் சொல்லமாட்டார். ஏனெனில் நாம் முழுமையாக அவரை சார்ந்திருக்க கூடாதென்று அவர் நினைப்பார். பிரச்சனைகளுக்கான தீர்வாக சில குறிப்புகளை சொல்வார், அதன் மூலம் நாம் தீர்வு காணமுடியும்.

அவர் எனக்கு மிகவும் பிடித்தாமான துடுப்பாட்ட இணை ஆவார். அவர் களத்தில் இருக்கையில் நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை தெளிவாக வைத்து இருப்பார். அந்த திட்டத்தை நாம் பின்பற்றினால் போதுமானதாக இருக்கும்”. என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்