எனக்கு மிகவும் பிடித்தமான பேட்டிங் இணை இவர் தான்! ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

Report Print Kavitha in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷாப் பண்ட் “ எம்எஸ் டோனி எனக்கு மிகவும் பிடித்தமான பேட்டிங் இணை ” என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிஷாப் பண்ட் கூறுவதாவது,

கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்எஸ் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார்.

எந்தவொரு பிரச்சினையை நான் சந்தித்தாலும், அவரை எளிதில் அணுகலாம். நாம் முழுமையாக அவரை சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைத்து பிரச்சினைக்கு முழுமையான தீர்வை அவர் ஒருபோதும் சொல்லமாட்டார்.

பிரச்சினையை சரி செய்தவற்கான குறிப்புகளை மட்டும் கூறுவார். அது நாம் பிரச்சினையை தீர்க்க உதவிகரமாக இருக்கும். அவர் எனக்கு மிகவும் பிடித்தமான பேட்டிங் இணை ஆவார்.

அவர் களத்தில் இருக்கையில், நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை தெளிவாக வைத்து இருப்பார். அந்த திட்டத்தை நாம் பின்பற்றினால் போதும் வெற்றி நிச்சயமாகும்’ என நெகிழ்ச்சியுடன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்