டோனிக்கு மாற்றாக வந்தவர் தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்"- சாடிய முன்னாள் வீரர்

Report Print Abisha in கிரிக்கெட்

டோனிக்கு மாற்றாக நினைத்து இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்ட ரிஷப் பன்ட் இப்போது மற்ற வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சாடியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின்னர் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.

இதுகுறித்து பேசிய ஆசிஷ் நெஹ்ரா, "திறமையான வீரர்களுக்கு நிறைய ஆதரவு தேவைப்படுகிறது. இப்போது கூட இந்திய அணியின் 5,6 ஆவது இடங்களில் விளையாட வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இப்போது கே.எல் ராகுல் 5ஆவது இடத்தில் களமிறங்குகிறார். ஆனால் 5 ஆம் இடத்தில் டோனிக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட ரிஷப் பன்ட் சக வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் சேவையை செய்து வருகிறார்" என்றார் காட்டமாக.

மேலும் தொடர்ந்த நெஹ்ரா "ரிஷப் பன்ட் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் அவரை அணியில் வைத்திருப்பது எதற்காக, அவரின் திறமைகளை 22 வயதிலேயே கண்டுக்கொண்டதால்தானே " என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்