செல்லப்பிராணிக்கு விளையாட கற்றுக் கொடுக்கும் டோனியின் மகள்... மகளுக்கு அறிவுறுத்தும் டோனி!- வைரல் வீடியோ

Report Print Abisha in கிரிக்கெட்

புல்வெளியில், டோனி அமர்ந்து மகளுக்கு அறிவுறுத்த, ஷிவா செல்லப்பிராணிக்கு விளையாட கற்றுக்கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த ஊரடங்கு நேரத்தில், பல கிரிக்கெட் வீரர்கள் சமூகவலை தளபக்கத்தில் லைவ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், டோனி தனது குடும்பத்துடன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அவர், தனது மகளுடன் செல்லப்பிராணிக்கு பந்து விளையாட கற்றுக்கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

"உன்னால் முடிந்ததை விட என்னால் அதை நன்றாக வீச முடியும்" என்று ஷிவா தனது செல்ல நாயிடம் சொல்கிறார். மேலும் நாயை நோக்கி ஒரு பந்தை எறிந்தார். செல்ல நாய் சில பந்துகளை வாயால் எகிறிப் பிடித்தது. மேலும் சிலவற்றைத் தவறவிட்டது.

இந்த வீடியோ சென்னை சூப்பர்கிங்ஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்