ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் ?

Report Print Abisha in கிரிக்கெட்

13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துமாறு பிசிசிஐ-க்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் துங்கியதும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள், நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில், போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ "நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்வாரியம் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடர் நடத்தி கொள்ளலாம் என்று பசிசிஐக்கு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறும்போது "ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது" என்றார்.

ஏற்கெனவே 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் தொடரின் 20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்