இந்தாண்டு ஐபிஎல் இல்லை என்றால் வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம்" - சவுரவ் கங்குலி !

Report Print Abisha in கிரிக்கெட்

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால், இந்திய வீரர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மார்ச் மாதம் துவங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் போட்டிகள், செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. தொடர்ந்து வெளிநாட்டில் நடத்தப்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து "மிட் டே" நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி "எங்களுடைய நிதி நிலை குறித்து நாங்கள் ஆராய வேண்டும். ஐபிஎல் போட்டிகளை நடத்தவில்லை என்றால் ரூ.4 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்படும். இதனைச் சமாளிக்க வீரர்களின் சம்பளப் பணத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். ஆனால் போட்டிகள் நடந்தால் இதுபோன்ற பிடித்தங்கள் இருக்காது" என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்