யுவராஜ் சிங்கை அணியில் இருந்து ஒதுக்கியதற்கு டோனி தான் காரணமா? முதல் முறையாக பேசிய கைப்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியில் யுவராஜ் சிங்கை டோனி, வேண்டும் என்றே ஓரம் கட்டிவிட்டதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில் அது குறித்து முதல் முறையாக அந்தணியின் முன்னாள் வீரர் மொகமது கைப் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி மீது பல ஆண்டுகளாகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துப் பேசி வருகிறார்.

அண்மையில் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், கோஹ்லி, டோனி சேர்ந்து தேர்வுக்குழுவினரும் யுவராஜை ஓரங்கட்டிவிட்டனர்.

சமீபத்தில் ரவி சாஸ்திரியைச் சந்தித்தேன். அவர் என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது அவரிடம் சிறந்த வீரர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தேன். டோனி, கோஹ்லி, ரோஹித் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும்.

அவர்கள் இந்திய கிரிக்கெட் விளையாட்டிற்காகப் பல விஷயங்கள் செய்துள்ளனர். ஆனால் பலர் யுவராஜ் சிங்கை ஒதுக்கிவிட்டதாக கூறினார்.

இதனால் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மொகமது கைப் கூறுகையில், டோனி, கோஹ்லி குறித்து யுவராஜ் தந்தை கூறும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்காது.

ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் சாம்பியன் வீரர் யுவராஜ் சிங். அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட்டில் ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவிட்டால், அவர்களை ஓரம் கட்டுவார்கள். அதன் பிறகு மீண்டும் அணிக்கு திரும்புவுது கடினம். ஏனென்றால் அடுத்தடுத்து நிறைய திறமையான வீரர்கள் அணிக்குள் நுழைய தயாராக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்